BREAKING NEWS
latest

Tuesday, January 26, 2021

குவைத் இந்திய தூதரகத்தில் 72-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது

குவைத் இந்திய தூதரகத்தில் 72-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது;இந்திய தூதர் சிபி ஜார்ஜ் அவர்கள் இந்திய தூதரகத்தின் வளாகத்திலுள்ள காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய விழாக்களை துவங்கி வைத்தார்

Image credit: Embassy Official

குவைத் இந்திய தூதரகத்தில் 72-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது

குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இன்று(26/01/21) காலை சரியாக 9:00 மணிக்கு 72-வது குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய தூதர் சிபி ஜார்ஜ் அவர்கள் இந்திய தூதரகத்தின் வளாகத்திலுள்ள காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய விழாக்களை துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கொரோனா பாதுகாப்பு விதிகள் பின்பற்றி நடத்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால் அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர்.

ஆனால் இந்த நிகழ்வு தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளங்கள் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது, இதை ஆயிரக்கணக்கான இந்திய சமூகத்தினரால் பார்க்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் தூதர் ஜனாதிபதியின் குடியரசு தின சிறப்பு உரையை கலந்துக்கொண்ட மக்களின் மத்தியில் வாசித்தார்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் இந்திய தூதரகத்தில் 72-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது

« PREV
NEXT »