BREAKING NEWS
latest

Tuesday, January 19, 2021

அமீரகத்தில் கணவர் வாகனத்தை பார்க்கிங் செய்துக் கொண்டிருந்தபோது உதவிய மனைவி அதே கார் மோதி உயிழந்தார்


அமீரகத்தின்,அஜ்மானில் ஒரு இந்திய பெண்மணி தனது கணவருக்கு காரை நிறுத்த உதவி செய்யும் போது எதிர்பாராத விதமாக,அதே வாகனம்  மோதியதால் பரிதாபமாக உயிரிழந்தார் என்றோசெய்தி இந்திய சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் சனிக்கிழமை அஜ்மானில் உள்ள மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் நடந்ததாகவும் உயிரிழந்த பெண்மணி கேரளா மாநிலம் திருச்சூர், கைபமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஷான்லியின் மனைவி லிஜி(வயது-45) என அடையாளம் காணப்பட்டுள்ளார். உடல்நல பரிசோதனைக்காக தம்பதியினர் மருத்துவமனைக்குச் சென்ற நேரத்தில் இந்த துயரமான சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தானது லிசி தனது கணவருக்கு மருத்துவமனையின் அருகில் உள்ள  பார்க்கிங்கில் காரைநிறுத்த உதவினார்.  திடீரென்று கணவர் பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலரேட்டரை அழுத்தியதில் கார் திடீரென முன்னோக்கி வேகமாகச் சென்று லிசியின் மீது மோதிய பிறகு அருகில் உள்ள சுவரிலுப் மோதியது. இதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிழந்தார்.

தம்பதியரின் மூத்த மகன் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பொறியியல் படித்து வருகிறார்,மகள் அங்குள்ள உம்-அல்-குவைன் பள்ளியில் படித்து வருகிறார்.  லிஜியின் உடலை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற விபத்துக்கள் எப்போதாவது நிகழ்கின்றன என்றும் வாகனத்தை நிறுத்தும்போது அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to அமீரகத்தில் கணவர் வாகனத்தை பார்க்கிங் செய்துக் கொண்டிருந்தபோது உதவிய மனைவி அதே கார் மோதி உயிழந்தார்

« PREV
NEXT »