BREAKING NEWS
latest

Monday, January 25, 2021

குவைத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு விஸ்மயா அமைப்பு சார்பில் உதவிகள் வழங்கப்பட்டது

குவைத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு விஸ்மயா அமைப்பு சார்பில் உதவிகள் வழங்கப்பட்டது;குவைத் இயங்கும் LuLu ஹைப்பர் மார்க்கெட்டுடன் இணைந்து இந்த உதவிகள் வழங்கப்பட்டது

குவைத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு விஸ்மயா அமைப்பு சார்பில் உதவிகள் வழங்கப்பட்டது

குவைத் இயங்கும் LuLu ஹைப்பர் மார்க்கெட்டுடன் இணைந்து விஸ்மயா இன்டர்நேஷ்னல் கலை மற்றும் சமூக சேவை அமைப்பின் மகளிர் பிரிவு தலைவி திருமதி. ஷைனி அவர்கள், குவைத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற தொழிலாளர்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பொருட்கள் நிரப்பப்பட்ட பைகளை விநியோகித்தார். கேரளா திரிசூரை பூர்வீகமாகக் கொண்ட ஷைனி கடந்த 25 ஆண்டுகளாக பெரிய மற்றும் சிறியதென்று பல இந்திய சமூக அமைப்புகளுடன் இணைந்து சமூக சேவை செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்பதும், கொரோனா காரணமாக நாட்டில் ஊரடங்கு நடைமுறையில் இருந்த நேரத்தில், குவைத்தின் உள்ள உள்நாட்டு சமூக சேவை அமைப்புகளிலும் இணைந்து தீவிரமாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு விஸ்மயா அமைப்பு சார்பில் உதவிகள் வழங்கப்பட்டது

« PREV
NEXT »