BREAKING NEWS
latest

Sunday, December 20, 2020

குவைத்தில் வருகின்ற ஜனவரி 1 முதல் 11 வரை விசா புதுப்பித்தல் தற்காலிகமான நிறுத்த முடிவு:


Dec-20,2020

குவைத்தில் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள்(ஈத்தனாமல்) புதுப்பிப்பதை ஜனவரி 1 முதல் 11 வரை இடைநிறுத்த மனிதவளக் மேன்பாட்டுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அமைச்சகத்தின் சேவைகள் புதிய தானியங்கி அமைப்பாக மாற்றப்பட்டுவதன் ஒரு பகுதியாக இந்த முடிவு என்று சம்பந்தப்பட்ட துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக, ஜனவரி 1 முதல் ஜனவரி 12 வரை காலாவதியாகும் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள்(ஈத்தனாமல்) புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களை இதற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் என்று மனிதவளக் மேன்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய அமைச்சகத்தின் சேவையில் உள்ள நடைமுறைகள் ஜனவரி 12 முதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு,மிக எளிதாகவும்,விரிவாகவும் அமைச்சகத்தின் சேவைகள் பெறுவதற்கான 
 புதுமையான தொழில்நுட்ப முறைக்கு மாற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளன.

தற்போது அமைச்சகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் கோப்பு எண்களில்( Registration Number),புதிய வசதி அறிமுகம் செய்வது முதல் மாற்றம் ஏற்படும் எனவும், புதிய வசதி நடைமுறையில் வந்தவுடன் நிறுவனங்களின் முதலாளிகள்(Sponsore ) தங்கள் புதிய கோப்பு எண்களை தேடி கண்டறியும் வசதி அறிமுகம் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் வருகின்ற ஜனவரி 1 முதல் 11 வரை விசா புதுப்பித்தல் தற்காலிகமான நிறுத்த முடிவு:

« PREV
NEXT »