BREAKING NEWS
latest

Monday, December 28, 2020

குவைத் மனித வளத்துறை அணையம் எச்சரிக்கை; இதை செய்யவில்லை என்றால் அபராதம்


குவைத் மனிதவளத்திற்கான பொது அணையம் ஜனவரி 12 ஆம் தேதிக்கு முன்னர் விசா காலம் முடிவடையும் நிலையில் உள்ளவர்கள் உடனடியாக தங்களுடைய விசாக்களை புதுப்பிக்க வேண்டும் என்று மீண்டும் எச்சரித்துள்ளது. இது தொடர்பான அறிக்கை கடந்த வாரம் வெளியிட்டிருந்த நிலையில் மீண்டும எச்சரிக்கை செய்துள்ளது:

விசா தொடர்பான சேவைகள் புதியதாக ஆன்லைன் முறைக்கு மாற்றப்படுவதால் விசாக்கள் புதுப்பித்தல் சேவைகள்  ஜனவரி 1 முதல் 11 வரை இடைநிறுத்தம் செய்யபடுகிறது என்றும், இதன் காரணமாக ஜனவரி 12 ஆம் தேதிக்கு முன்னர் விசா காலம் முடியும் நபர்கள் உடனடியாக விசா புதுப்பிக்க வேண்டும், இல்லையெனில் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படிப்பட்ட நபர்கள் விசா புதுப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். புதுப்பித்தல் மற்றும் பரிமாற்ற பரிவர்த்தனைகள் வியாழக்கிழமைக்கு முன்னர் முடிக்கப்பட வேண்டும். புதிய தானியங்கி அமைப்பின் சேவைகளை பொதுமக்கள் பெறுவதற்காக பராமரிப்பு வேலைகள் நடைபெற உள்ளதால்  இரண்டு வாரங்களுக்கு விசா சேவைகள் நிறுத்தி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் மனித வளத்துறை அணையம் எச்சரிக்கை; இதை செய்யவில்லை என்றால் அபராதம்

« PREV
NEXT »