BREAKING NEWS
latest

Thursday, December 24, 2020

குவைத்தில் தடுப்பூசியின் முதல் டோஸ் பெறுபவர்கள்,2-வது டோஸ் பெறும் வரை நாட்டிற்கு வெளியே பயணிக்க அனுமதி கிடையாது

Dec-24,2020

குவைத்தில் இன்று(வியாழக்கிழமை) முதல் Pfizer-BioNTech COVID-19  தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கபடுகிறது.இந்நிலையில் கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் பெறும் ஒருவர் இரண்டாவது டோஸ் பெறும் வரை நாட்டிற்கு வெளியே பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

முதல் டோஸ் பெற்ற ஒருவருக்கு இரண்டாவது டோஸ் மருந்து நான்கு முதல் ஆறு வாரங்களுக்குள் செலுத்தபடும். எனவே இந்த காலகட்டத்தில் இரண்டாவது டோஸ் பூர்த்தி செய்யாதவர்கள் நாட்டிற்கு வெளியே பயணம் செய்ய தடை விதிக்கப்படுவார்கள் என்று உள்ளூர் அரபு நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியின் முதல் Batch நேற்று(23/12/20) நாட்டிற்கு வந்து சேர்ந்தது.

பிரதமர் ஷேக் சபா காலித் அல் சபா மற்றும் சுகாதார அமைச்சர் ஷேக் பசில் அல்-சபா ஆகியோருக்கு இன்று காலை மிஷ்ரிஃப் சிகப்பு மைதானத்தில்( FairGround) உள்ள சிறப்பு மையத்தில் வைத்து தடுப்பூசி செலுத்துவதன் மூலம் நாட்டில் கொரோனா தடுப்பு பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு தொடங்கும். முதல் கட்டமாக  தடுப்பூசி, முன்னணி சுகாதார ஊழியர்களுக்கும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் வழங்கப்படும். தடுப்பூசி பெற ஆர்வமுள்ளவர்களுக்கு முன்பதிவு செய்ய ஆன்லைன் தளத்தை சுகாதரத்துறை அமைச்சகம் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே 83

ஆயிரம் பேர் வரையில் இந்த தளத்தில் பதிவு செய்துள்ளனர். ஆன்லைனில் பதிவு செய்த ஒருவருக்கு தடுப்பூசி பெறுவதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் மையத்திற்கு வரவில்லை என்றால், மற்றொரு நேரம் அனுமதிக்கப்படும். ஆனால் அவர்கள் மீது எந்தவிதமான தண்டனை நடவடிக்கையும் இருக்காது.

இதற்கிடையில், கோவிட் வைரஸின் புதிய மரபணு மாற்றம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட புதிய சூழ்நிலை குறித்து சுகாதார அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பு மற்றும் பிரிட்டிஷ் சுகாதார அமைச்சகத்தின் கோவிட்-20  தொடர்பான  விரிவான அறிக்கை அடுத்த திங்கட்கிழமை நாட்டிற்கு வரும் என்றும், இதன் அடிப்படையில் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளுக்காக சுகாதார அமைச்சகம் காத்திருக்கிறது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் தடுப்பூசியின் முதல் டோஸ் பெறுபவர்கள்,2-வது டோஸ் பெறும் வரை நாட்டிற்கு வெளியே பயணிக்க அனுமதி கிடையாது

« PREV
NEXT »