BREAKING NEWS
latest

Monday, December 28, 2020

அமீரக சுற்றுலா விசாக்கள் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு; நல்லிணக்க அடிப்படையில் ஆட்சியாளர் நடவடிக்கை

அமீரக வந்துள்ள பல பயணிகள் தாங்கள் திரும்ப வேண்டிய நாடுகளின் விமான நிலையங்கள் மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள சிரமங்களை நிவர்த்தி செய்ய இந்த நீட்டிப்பு தொடர்பான செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் அரசாங்க கட்டணம் இல்லாமல் சுற்றுலா விசாக்களை ஒரு மாதத்திற்கு நீட்டிக்க அறிவுறுத்தல்களை வெளியிட்டார்.

சில விமான நிலையங்கள் உலக அளவில் மூடப்பட்டதால் பார்வையாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை நிவர்த்தி செய்ய நல்லெண்ண அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவின் படி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை தந்துள்ள அனைத்து சுற்றுலாப் பயணிகளும் தங்கள் விசாக்களை கட்டணம் இல்லாமல் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கலாம்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to அமீரக சுற்றுலா விசாக்கள் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு; நல்லிணக்க அடிப்படையில் ஆட்சியாளர் நடவடிக்கை

« PREV
NEXT »