BREAKING NEWS
latest

Thursday, December 31, 2020

சவுதியில் பள்ளிவாசல் ஊழியர் தலை துண்டித்து கொடுரமாக கொலை

சவுதி அரேபியாவின் ஜித்தா அல்-ஹராசத் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியின் ஊழியர் தலை துண்டிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த திங்கள்கிழமை இரவு நடந்தது.

இஷா தொழுகைக்காக ஒலிபெருக்கி மூலம் வாங்கு  ஓதும்போது 60-வயதான அந்த முதியவர் இரண்டு நபர்களால் தாக்கப்பட்டார். பின்னர் அந்த வயதான நபரின் கழுத்தில் பல முறை குத்தி கீழை தள்ளிய பிறகு குற்றவாளிகள் தொண்டையை அறுத்தனர்.

மேலும் போலீசார் கூறுகையில் இந்த கொடுரமான குற்றத்திற்குப் பிறகு அங்கிருந்து இருவரும் தப்பி ஓடிவிட்டார், பின்னர் பாதுகாப்பு படையினரிடம் ஒருவரு சரணடைந்தார். இரண்டாவது குற்றவாளியை கண்டுபிடிக்க விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொலைக்கு பின்னால் உள்ள நோக்கம் தெளிவாக தெரியவில்லை.



WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதியில் பள்ளிவாசல் ஊழியர் தலை துண்டித்து கொடுரமாக கொலை

« PREV
NEXT »