BREAKING NEWS
latest

Wednesday, December 30, 2020

குவைத்தில் அடுத்த திங்கட்கிழமை முதல் 60 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகள் அல்லாதவர்களின் விசா புதுப்பிக்கப்பட்டாது

குவைத் அடுத்த திங்கட்கிழமை முதல் 60 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகள் அல்லாதவர்களுக்கு பணி அனுமதிப்பத்திரத்தை(Work Permit) புதுப்பிக்காது. இது தொடர்பாக எந்தவொரு சலுகையும் வழங்கப்படமாட்டாது என்றும், இந்த முடிவு கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்றும் அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் மூலம் 60 வயதிற்கு மேற்பட்ட எந்தவொரு வெளிநாட்டவரும் பல்கலைக்கழக பட்டம் பெறாதவர்கள் என்றால தங்களின் தற்போதைய பணி அனுமதி காலாவதியானவுடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். அதே நேரத்தில், அவர்கள் அரசாங்கம் நிர்ணயம் செய்துள்ள தகுதிகள் இருந்தால், குவைத்தில் உள்ள தங்கள் குழந்தைகளின் கீழ் தங்கியிருக்கும் குடும்ப விசாவாக மாற்றலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் அடுத்த திங்கட்கிழமை முதல் 60 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகள் அல்லாதவர்களின் விசா புதுப்பிக்கப்பட்டாது

« PREV
NEXT »