BREAKING NEWS
latest

Friday, December 25, 2020

குவைத்தில் ஆபத்தான முறையில் கனரக லாரி ஓட்டியதற்காக டிரைவர் கைது செய்யப்பட்டார்

Dec-25,2020

குவைத்தில் பாதுகாப்பற்ற முறையில் லாரி ஓட்டிய வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து டிரக் டிரைவர் ஒருவரை ஆதாரங்கள் அடிப்படையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதற்காக டிரைவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து தொடர்பான புகார்கள் மற்றும் ஆபத்தான நேரங்களில் உடனடியாக உதவிக்கு பொதுமக்கள் அனைவரும் உள்துறை அமைச்சகத்தின் 112 அல்லது 99324092 என்ற எண்ணிகளில் அழைத்து உங்கள் புகார்களை பதிவு செய்யலாம்.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் ஆபத்தான முறையில் கனரக லாரி ஓட்டியதற்காக டிரைவர் கைது செய்யப்பட்டார்

« PREV
NEXT »