BREAKING NEWS
latest

Friday, December 18, 2020

குவைத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சிவில்-ஐடி சேவைகள் மீண்டும் துவங்கியது:

 


Dec-18,2020

குவைத் Public Authority for Civil Information வெளியிட்டுள்ள அறிக்கையில் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட சிவில்-ஐடி தொடர்பான சேவைகள் இன்று(18/12/20) வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் இயக்கத்திற்கு வந்துள்ளதாக மாலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இதையடுத்த அலுவலகத்தின் அடுத்த வேலை நாட்களில் புதுப்பித்தல் செய்யப்பட்ட சிவில்-ஐடி களை  சம்பந்தப்பட்ட நபர்கள் எடுத்துக்கொள்ள முடியும். கடந்த சில நாட்களுக்கு முன்பு இயந்திரங்களின் பராமரிப்பு பணிகளுக்காக சேவை தற்காலிகமாக நிறுத்துவதாக  Public Authority for Civil Information அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சிவில்-ஐடி சேவைகள் மீண்டும் துவங்கியது:

« PREV
NEXT »