BREAKING NEWS
latest

Tuesday, December 29, 2020

குவைத்தில் வேலை இழப்பு இந்தியர் ஒருவர் தற்கொலை


(Photo Credit:Pixabay)

குவைத்தில் 31- வயதான இந்தியர் ஒருவர் தான் செய்துவந்த வேலையினை இழந்தன் காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. Abu Halifa பகுதியில் உள்ள அவரது குடியிருப்பில் இந்தியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிற்றில் தொங்கிய சடலத்தை மீட்டனர். போலீசார் அவரது நண்பர்களிடம் நடத்திய விசாரணையில், அவர் வேலை செய்த நிறுவனம் அவரை வேலையில் இருந்து நீக்கியதன் காரணமாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்தார் எனவும், அறையில் யாரும் இல்லாத நேரத்தில் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து இது தொடர்பான வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை துவங்கியுள்ளனர்.




WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் வேலை இழப்பு இந்தியர் ஒருவர் தற்கொலை

« PREV
NEXT »