BREAKING NEWS
latest

Monday, December 14, 2020

இந்திய ராணுவ தலைமை அதிகாரி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே சவுதியில் சென்றடைந்தார்:

Dec-14,2020

அமீரக சுற்றுப்பயணம் முடித்து இந்திய ராணுவ தலைமை அதிகாரி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று சவுதி ரியாத் சென்றார்.

சவுதி Land Forces தலைமையகத்தில் கமாண்டர் பஹத் பின் அப்துல்லா முத்தேரி தலைமையிலான குழுவினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இரண்டு நாடுகளின் முக்கிய அதிகாரிகள் தலைமையிலான பல முக்கியமான கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இராணுவ துறையில் பரஸ்பர ஒத்துழைக்க குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

வரலாற்றில் முதன்முறையாக ஒரு இந்திய ராணுவ தலைமை அதிகாரி சவுதி சுற்றுப்பயணம் மேற்கொண்டது இதுவே முதல் முறை ஆகும். பல சர்வதேச பத்திரிகைகள் இதை முக்கிய செய்தியாக வெளியிட்டுள்ளது.














WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to இந்திய ராணுவ தலைமை அதிகாரி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே சவுதியில் சென்றடைந்தார்:

« PREV
NEXT »