BREAKING NEWS
latest

Monday, December 14, 2020

குவைத் இந்திய தூதரகம் சார்பில் டிசம்பர் மாதத்திற்கான Open-House நடைபெறும் தேதி அறிவிப்பு:

Dec-14,2020

குவைத்தில் கொரோனா காரணமாக இடையில் நிறுத்தி வைக்கப்பட்ட Open House(குறை கேட்கும்  நிகழ்வு) கடந்த மாதம்(நவம்பர்) மீண்டும் துவங்கப்பட்ட நிலையில், டிசம்பர் மாதத்திற்கான Open House சந்திப்பு நிகழ்ச்சி தேதியை சற்றுமுன் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் வருகிற டிசம்பர்-23,புதன்கிழமை சரியாக பிற்பகல் 3.30 மணிக்கு, நிகழ்ச்சி ஆன்லைனில் நடைபெறும் எனவும், தூதர் சி.பி.ஜார்ஜ் இதில் கலந்து கொள்வார்.நிகழ்ச்சியில் தலைப்பு "Labour Laws Of Kuwait" என்பதாகும்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்கள் பெயரிலான  பாஸ்போர்ட், பாஸ்போர்ட் எண், சிவில் ஐடி எண், தொடர்பு எண், குவைத்தில் உள்ள உங்கள் முகவரி உள்ளிட்டவை மின்னஞ்சல் முகவரி community.kuwait@mea.gov.in க்கு அனுப்ப வேண்டும். இதையடுத்து பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கும் Meeting ID மற்றும் பிற விவரங்கள் பதிவு செய்யும் நபர்களுக்கு தெரிவிக்கப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் இந்திய தூதரகம் சார்பில் டிசம்பர் மாதத்திற்கான Open-House நடைபெறும் தேதி அறிவிப்பு:

« PREV
NEXT »