BREAKING NEWS
latest

Thursday, December 17, 2020

குவைத்திற்கு தடை விதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து நேரடி விமான சேவை தவறான தகவல் சற்றுமுன் செய்தி:

 


Dec-17,2020

குவைத்திற்கு அதிக ஆபத்துள்ள தடை விதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து ஜனவரி முதல் நேரடி விமானங்களை இயக்கும் என்ற தகவல் உண்மை அல்ல வதந்தி என்று குவைத் சிவில் ஏவியேஷன் சற்றுமுன் அதிகாரப்பூர்வ செய்தி வெளியிட்டுள்ளது. ஏனெனில் 34 நாடுகளின் தடை பட்டியல் அப்படியே உள்ளது அதில் இன்று வரையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று சம்பந்தப்பட்ட துறை விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பான செய்தியை குவைத்தின் அதிகாரப்பூர்வ தினசரி நாளிதழ் நேற்று செய்தி வெளியிட்டது. அதன் அடிப்படையில் எங்கள் தளத்திலும் செய்தி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குவைத் சிவில் ஏவியேஷன் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.








 

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்திற்கு தடை விதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து நேரடி விமான சேவை தவறான தகவல் சற்றுமுன் செய்தி:

« PREV
NEXT »