BREAKING NEWS
latest

Thursday, December 10, 2020

குவைத்தில் கொரோனா தடுப்பூசிகளைப் பெற விரும்பும் அனைவரும் இணையதளத்தில் பெயரை பதிவு செய்யுங்கள்:

Dec-10,2020

குவைத்தில் கொரோனா தடுப்பூசி பெற விரும்பும் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான முன் பதிவு இணைய தளத்தை சுகாதரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதிகாரப்பூர்வ செய்தி அடிப்படையில் அனைவரும் பின்வரும் இணையதளத்தில் தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம்.

இணையதள முகவரி Link:https://cov19vaccine.moh.gov.kw/ 

ஆனால் தடுப்பூசி குவைத்திற்கு வந்தபின்னர் சுகாதாரத்துறை அமைச்சகம் முன்னுரிமைகளுக்கு ஏற்ப தகுதியான நபர்களை தீர்மானிக்கும். இப்படி முன்பதிவு செய்யும் நபர்களில் கொரோனா தடுப்பூசி பெற முதல் கட்டத்தில் சேர்க்கப்பட்டவர்களுக்கு  அதிகாரிகள் குறுஞ்செய்தி அனுப்புவார்கள். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 18 வயதிற்குட்பட்டவர்கள் தடுப்பூசி பட்டியலில்

இருக்க மாட்டார்கள், எனவே அவர்கள் தளத்தில் பதிவு செய்ய முடியாது என்றும் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.


குறிப்பு: ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பதிவு செய்ய முயற்சி செய்தால் சில நேரங்களில் இணையதளம் முடங்கலாம்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் கொரோனா தடுப்பூசிகளைப் பெற விரும்பும் அனைவரும் இணையதளத்தில் பெயரை பதிவு செய்யுங்கள்:

« PREV
NEXT »