BREAKING NEWS
latest

Monday, December 7, 2020

குவைத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது:

குவைத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது:

Dec-7,2020

குவைத்தின் Al-Rdeifa-ஐ அடுத்த Al-Kirbi பகுதிகளில் ஒரு கட்டத்தின் இடிபாடுகளில் இருந்து 60-வயது மதிக்கதக்க ஆடு மேய்க்கும் வேலை செய்து வந்த தொழிலாளியின் உடல் கண்டெடுக்கப்பட்டது என்றுKabd தீயணைப்பு துறை செய்தி வெளியிட்டுள்ளது. இவர் 1950 பிறந்தவர் எனவும் மழை காரணமாக இவர் தங்கியிருந்த இடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய முதலாளி அளித்த தகவல் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மற்றோரு சம்பவம் குவைத்தின் Al-Wafra காவல்நிலையத்தில் நடந்துள்ளது. அதாவது ஒரு வழக்கு சம்மந்தமாக 1988-யில் பிறந்த ஆசியா நாட்டவரை காவல்நிலையம் அழைத்து வந்த நிலையில் அவர் அங்குள்ள தற்காலிகமாக சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அதன் உள்ளேயுள்ள குளியலறையில் தன்னுடைய உடையால் தூக்கிட்டு தற்கொலை செய்தார் என்று தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நீண்டநேரம் ஆகியும் கழிவறைக்கு சென்ற நபரை காணாமல் போலிசார் நடத்திய சோதனை செய்தபோது அவர் தூக்கில் தொங்கிய தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை துவங்கியுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »