BREAKING NEWS
latest

Thursday, December 3, 2020

குவைத்திலிருந்து டிசம்பரில் இந்தியாவுக்கு 128 விமான சேவைகள் இதில் 12 சேவைகள் தமிழகத்திற்கு:

குவைத்திலிருந்து டிசம்பரில் இந்தியாவுக்கு 128 விமான சேவைகள் இதில் 12 சேவைகள் தமிழகத்திற்கு:


Dec-3,2020

இந்திய அரசு சார்பில் கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளில் வாழ்வாதர அடிப்படையில் வேலைக்கு வந்து சிக்கியுள்ள நபர்களில் தாயகம் திரும்புவதற்கு விரும்பும் இந்தியர்களை அழைத்துவர கட்டண அடிப்படையில் வந்தே பாரத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் டிசம்பர் மாதத்திற்கான வந்தே பாரத் திட்டத்தின் Phase-8+ பட்டியலை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் டிசம்பர் துவங்கி ஜனவரி-1,2021 வரையில் வளைகுடா உட்பட உலகெங்கிலும் இருந்து 1123 விமான சேவைகளை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக குவைத்தில் இருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு மொத்தம் 128 விமான சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழகத்திற்கு 12 விமானங்களின் சேவைகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அதன் விபரங்கள் பின்வருமாறு:

1) இதில் முதல் விமானம் டிசம்பர்-6 அன்று சென்னை வழியாக திருச்சி விமான நிலையம் செல்கிறது.

2) டிசம்பர்-7 சென்னை வழியாக திருச்சி விமான நிலையம் செல்கிறது.

3) டிசம்பர்-8 அன்று சென்னைக்கு விமானம் செல்கிறது.

4) டிசம்பர்-13 சென்னை வழியாக திருச்சிக்கு விமானம் செல்கிறது

5) டிசம்பர்-14 அன்று திருச்சிக்கு விமானம் செல்கிறது.

6) டிசம்பர்-16 அன்று சென்னை விமானம் செல்கிறது.

7) டிசம்பர்-20 அன்று சென்னை வழியாக திருச்சிக்கு விமான செல்கிறது.

8) டிசம்பர்-21அன்று சென்னை வழியாக திருச்சி விமான நிலையம் செல்கிறது.

9 டிசம்பர்-25 அன்று சென்னை விமானம் செல்கிறது.

10) டிசம்பர்-27 அன்று சென்னை வழியாக திருச்சிக்கு  விமானம் செல்கிறது.

11) டிசம்பர்-28 அன்று திருச்சிக்கு விமானம் செல்கிறது.

12) டிசம்பர்-30 அன்று சென்னைக்குவிமானம் செல்கிறது.

மேலும் திருவனந்தபுரம் விமான நிலையம்  மூலம் கன்னியாகுமரி, திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் இந்தியர்களுக்கு  3 விமானங்கள் இயக்கப்படுகிறது

1) டிசம்பர்-9 அன்று விஜயவாடா வழியாக திருவனந்தபுரம் விமானம் செல்கிறது.

2) டிசம்பர்-23 அன்று நேரடியாக திருவனந்தபுரம் விமானம் செல்கிறது.

3) டிசம்பர்-25 விஜயவாடா வழியாக திருவனந்தபுரம் விமானம் செல்கிறது.

இதில் மாற்றங்கள் எதாவது வருமா.....??? அல்லது கூடுதல் விமானங்கள் இயக்கபடுமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

Editor: ktpnews Official 




WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்திலிருந்து டிசம்பரில் இந்தியாவுக்கு 128 விமான சேவைகள் இதில் 12 சேவைகள் தமிழகத்திற்கு:

« PREV
NEXT »