BREAKING NEWS
latest

Saturday, November 28, 2020

குவைத் முழுவதும் பலத்த மழை: அவசர தேவையை தவிர மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை:

குவைத் முழுவதும் பலத்த மழை: அவசர தேவையை தவிர மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை:


Nov-28,2020

குவைத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு லேசாகத் தொடங்கிய மழை இன்று பிற்பகல் முதல்  தீவிரமடை தொடங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை இப்போதும்  தொடர்ந்து வருகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை வரையில் இது தொடரும் என்று வல்லுனர் கூறுகின்றனர்.

இதற்கிடையில், சீரற்ற வானிலை காரணமாக, சுகாதார அமைச்சகம் நாட்டின் குடியிருப்பாளர்களுக்கு சிறப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் வசிப்பவர்களுக்கு வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளிலிருந்து விலகி இருக்கவும், மின்சார தாக்கும் வாய்ப்புகள் எந்த செயலையும்  செய்யாமல் தவிர்க்கவும் அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆஸ்துமா மற்றும் நிமோனியா நோயாளிகள் எப்போதும் மூச்சு திணறல் நேரத்தில் பயன்படுத்தும் Bronchodilators கையில் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும், அவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால் அவசர எண்களை அழைக்க வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.(Emergency Contact 112)

அத்தியாவசிய தேவைகளைதவிர யாரும் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நாட்டில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர் முகமது அல் கரம் எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் முழுவதும் பலத்த மழை: அவசர தேவையை தவிர மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை:

« PREV
NEXT »