BREAKING NEWS
latest

Tuesday, November 24, 2020

குவைத்தில் வியாழக்கிழமை முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு:

குவைத்தில் வியாழக்கிழமை முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு:


Nov-24,2020

குவைத்தில் வருகிற வியாழக்கிழமை(நவம்பர் 26) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வாளர் முகமது அல் கரம் எச்சரித்துள்ளார்.

ஆபிரிக்க கண்டத்திலிருந்து மத்திய அரேபியாவின் தென்கிழக்கு பகுதிக்கு வீசும் காற்றினால் ஏற்படும்  காற்றழுத்த தாழ்வு நிலையின் விளைவாக இந்த மழை பெய்யும் என்றார். இந்த நாட்களில் நாட்டின் வானிலை ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை முதல் நாட்டில் காற்றின் வெப்பநிலையில் கணிசமான வீழ்ச்சி ஏற்படும் என்றும் பின்னர் லேசான வானிலைக்கு திரும்பும் என்றும் அவர் கூறினார்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் வியாழக்கிழமை முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு:

« PREV
NEXT »