BREAKING NEWS
latest

Thursday, November 12, 2020

குவைத் இந்திய தூதரகம் வெள்ளை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்காக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை:

குவைத் இந்திய தூதரகம் வெள்ளை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்காக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை:



நவம்பர்-12,2020

குவைத்தில் உள்ள பலர் இந்திய நண்பர்கள் கேள்விக்கு பதில், நேற்று முதல் பல நண்பர்கள் Page inbox  மற்றும் WhatsApp யில் தொடர்பு கொண்டு வருகிறனர். அவர்களுக்கு இந்த பதிவு, உங்கள் கேள்விகள் தொடர்பாக விசாரித்தில் பின்வரும் பதில் கிடைக்கப்பெற்றது.

விசா இல்லாமல் வழக்கு இருப்பவர்கள் வெள்ளை பாஸ்போர்ட் வைத்திருந்து ஊருக்கு போக விரும்பினால் தூதரகத்தில் பதிவு செய்து நாடு கடத்தல் மையம் வழியாக ஊருக்கு செல்ல முடியும். இந்த வழிமுறையை பின்பற்றி தூதரகம் இந்திய தொழிலார்களை ஊருக்கு அனுப்பி கொண்டு தான் இருக்கிறது.

விசா இருந்து வழக்கு இல்லாமல் வெள்ளை பாஸ்போர்ட் வைத்து இருப்பவர்கள் குவைத் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து Exit VISA அடித்து ஊருக்கு போக முடியும். இந்த வழிமுறையை பின்பற்றி தூதரகம் இந்திய தொழிலார்களை ஊருக்கு அனுப்பி கொண்டு தான் இருக்கிறது. 

இந்திய தூதரகம் வெள்ளை பாஸ்போர்ட்(தற்காலிக பாஸ்போர்ட்)  புதுபித்து கொடுக்க வில்லை.  பிரச்சினையில் இருப்பவர்கள் (வழக்கு மற்றும் விசா காலாவதி ஆனவர்கள்) ஊருக்கு போக விரும்பினால் தூதரகத்தை தொடர்பு கொள்ளவும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் இந்திய தூதரகம் வெள்ளை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்காக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை:

« PREV
NEXT »