துபாய் விபத்தில் விமான வேகத்திற்கு இணையாக பறந்த ஜெட்மேன் வின்சென்ட் உயிரிழந்தார்:
Nov-19,2020
உலகெங்கிலும் உள்ள சாஹசம் செய்ய துடிக்கும் ஒவ்வொரு நபரையும் ஒரே ஒரு வீடியோ மூலம் கட்டிபோட்டவர் ஜெட்மேன் வின்சென்ட்(வயது-36) அவர் துபாயில் உயிரிழந்தார்.
துபாய் வான்வழி 400 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து கொண்டிருந்த எமிரேட் விமானத்துக்கு இணைய ஜெட்மேன் உடை அணிந்து அவர் பறந்து சென்ற ஒரு வீடியோவே போதும் இவரை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை துபாயின் பலைவன பகுதிகளில் உள்ள ஜெட்மேன் பயிற்சி தளத்தில் பயிற்சியில் ஈடுபட்ட போது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் சிக்கி அவர்கள் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அந்த பயிற்சி மையத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



