BREAKING NEWS
latest

Saturday, November 7, 2020

குவைத்தின் Al-Wafra பகுதியில் விபத்து ஒருவர் பலி மற்றும் 2 பேர் படுகாயம்:

குவைத்தின் Al-Wafra பகுதியில் விபத்து ஒருவர் பலி மற்றும் 2 பேர் படுகாயம்:



நவம்பர்-7,2020

குவைத்தின் Al-Wafra பகுதியில் பழைய Al-Atal இணைப்பு சாலையில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி , வெள்ளிக்கிழமை இரவு இந்த பயங்கரமான விபத்து ஏற்பட்டது என்று செய்தி வெளியாகியுள்ளது.

இதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இறந்தவர் குவைத் குடிமகன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. படுகாயமடைந்த நபர்களின் விபரங்கள் தெரியவில்லை.

அவசரகால உதவி மையத்திற்கு கிடைத்த தகவல் அடிப்படையில் மீட்பு குழுவினர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தின் Al-Wafra பகுதியில் விபத்து ஒருவர் பலி மற்றும் 2 பேர் படுகாயம்:

« PREV
NEXT »