BREAKING NEWS
latest

Wednesday, November 11, 2020

குவைத்தில் 8 மாதங்கள் இடைவெளிக்கு பிறகு எண்ணெய் துறையில் தொழிலாளர்களை அழைத்து வர அனுமதி:

குவைத்தில் 8 மாதங்கள் இடைவெளிக்கு பிறகு எண்ணெய் துறையில் தொழிலாளர்களை அழைத்து வர அனுமதி:


நவம்பர்-11,2020

குவைத்தில் அரசு துறை மற்றும் அரசின் எண்ணெய் துறை கீழ் ஒப்பந்தம் உள்ள நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்களை தேர்வு செய்ய Public Manpower Authority 8 மாதங்களுக்கு முன்பு அனுமதி அளித்த நிலையில், கொரோனா நோய்தொற்று பரவல் தொடர்ந்து அவர்களை அழைத்துவர முடியாத நிலையில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு தற்போது அழைத்துவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இதற்கு குவைத் அமைச்சரவையின் இறுதி அனுமதி தேவை என்றும் சம்மந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று பிரபல தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா பிரச்சினை காரணமாக மற்ற நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்களை தேர்வு செய்ய அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் விளக்கமளித்தார் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்தி தினசரி பத்திரிகையை மேற்கோள் காட்டி பிற பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் 8 மாதங்கள் இடைவெளிக்கு பிறகு எண்ணெய் துறையில் தொழிலாளர்களை அழைத்து வர அனுமதி:

« PREV
NEXT »