BREAKING NEWS
latest

Monday, November 30, 2020

குவைத்தில் டிசம்பர்-7 முதல் தடைசெய்யப்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீட்டு தொழிலாளர்கள் நுழைய அனுமதி:

குவைத்தில் டிசம்பர்-7 முதல் தடைசெய்யப்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீட்டு தொழிலாளர்கள் நுழைய அனுமதி:



Nov-30,2020

குவைத்தில் வருகின்ற டிசம்பர்-5 பாராளுமன்ற தேர்தல் நடந்து முடியும் நிலையில். டிசம்பர் 7 முதல் நுழைய தடை விதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீட்டுத் தொழிலாளர்கள் நேரடியாக நுழைவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்ற அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது. 

அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தாரிக் அல் முசாராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குவைத் திரும்பும் தொழிலாளர்களுக்கு பயணச்சீட்டு கட்டணம் தவிர்த்து, தனிமைப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் சேர்த்து 270 தினார்கள் மதிப்பில் அனைத்து வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்

மேலும் தங்கள் வீட்டுத் தொழிலாளர்களை திருப்பி அழைக்க விரும்பும் ஸ்பான்சர்கள்(அரபிகள்) இதற்காக அறிமுகம் செய்யும் சிறப்பு ஆன்லைன் தளத்தில் தொழிலாளியின் பெயரை பதிவு செய்ய வேண்டும். தொழிலாளர்கள் குவைத்தில் நுழைய எடுக்கப்பட்டுள்ள கூடுதல் நடைமுறைகள் குறித்து   வரும் மணிநேரத்தில் தெளிவான விபரங்கள் தெரியவரும்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் டிசம்பர்-7 முதல் தடைசெய்யப்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீட்டு தொழிலாளர்கள் நுழைய அனுமதி:

« PREV
NEXT »