BREAKING NEWS
latest

Wednesday, November 25, 2020

குவைத் காவல்துறையினர் மினி பஸ்ஸில் கடத்தப்பட்ட 364 பாட்டில்கள் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்:

குவைத் காவல்துறையினர் மினி பஸ்ஸில் கடத்தப்பட்ட 364 பாட்டில்கள் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்:


Nov-25,2020

குவைத்தின் Mahaboula பகுதியில்  நிறுத்தப்பட்டிருந்த மினிபஸ் ஒன்று வழக்கமான சோதனையின் போது போலீஸ் குழுவின் கவனத்திற்கு வந்தது. போலீசார் வாகனத்தை நோக்கி நெருங்கி வருவதைக் கண்டதும்  மினிபஸில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில்  மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மினி பஸ்ஸில் கடத்தப்பட்ட 364 பாட்டில்கள் கள்ளச்சாராய குவியலை அஹ்மதி போலீசார் பறிமுதல் செய்தனர். இவை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்தன.

தொடர்ந்து குற்றவியல் துறையின் கைரேகை தடயவியல் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு  வந்து வாகனத்தில் இருந்த கைரேகைகளை சேகரித்தனர். தப்பியோடியவர்களுக்கான தேடல் நடைபெற்று வருகின்றன.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் காவல்துறையினர் மினி பஸ்ஸில் கடத்தப்பட்ட 364 பாட்டில்கள் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்:

« PREV
NEXT »