BREAKING NEWS
latest

Tuesday, November 17, 2020

குவைத் திரும்பும் வீட்டுத் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தல் கட்டணம் நாள் ஒன்றுக்கு 30 தினாருக்கு குறைவாக இருக்கும்:

குவைத் திரும்பும் வீட்டுத் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தல் கட்டணம் நாள் ஒன்றுக்கு 30 தினாருக்கு குறைவாக இருக்கும்:

Nov-17,2020

குவைத் ஏர்வேஸ் மற்றும் ஜசீரா ஏர்வேஸ் ஆகியவை இந்த கொரோனா காலத்திலும் நிலைமையை கையாளவும் விமானங்களை மீண்டும் இயக்குவதற்கு முழுமையாக தயாராக இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், 34 நாடுகளின விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கான அமைச்சரை கவுன்சிலின் இறுதி முடிவுக்காக வெளிநாட்டினர் உள்ளிட்ட  அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

குவைத் ஏர்வேஸின் இரண்டு வாரியங்களின்(two Boards) தலைவர் அலி முகமது அல் துகான் மற்றும் குவைத் அல் ஜசீரா இயக்குநர்கள் குழுவின் தலைவர் மார்வன் போடியா ஆகியோரை சிவில் ஏவியேஷன் நிர்வாகம் சந்தித்தனர், உடன் சேவைத்துறை அமைச்சரும், தேசிய சட்டமன்றத்தின் மாநில அமைச்சருமான முபாரக் அல் ஹாரிஸ் அவர்களும் கலந்து கொண்டார். 

ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கான பரிசோதனை மற்றும் பின்தொடர்தல்(Followup)l நடைமுறைகளை மேற்கொள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோய்தொற்று தடுப்பு ஊழியர்கள் முழுமையாக தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சின் முடிவுக்கு காத்திருப்பதாக சம்மந்தப்பட்ட வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.

திருப்பி வரும் வீட்டுத் தொழிலாளர்களை தனிமைப்படுத்தப்படுவதற்கு அறைகள் தயாராக(Hotel & Private Flat)s உள்ளன, மேலும் நாள் ஒன்றுக்கு மூன்று நேரத்திற்கு உணவு உட்பட கட்டணம் 30 KD க்கு குறைவாக இருக்கும் என்றும், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தில், 7-வது நாள் பரிசோதனையில் முடிவு எதிர்மறையாகக் காணப்பட்டால் தனிமைப்படுத்தல் காலம் 7 நாட்களாகக் குறைக்கப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது. மேலும் திரும்பி வரும் வீட்டுத் தொழிலாளர்களுக்கான டிக்கெட் விலை நியாயமானதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் திரும்பும் வீட்டுத் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தல் கட்டணம் நாள் ஒன்றுக்கு 30 தினாருக்கு குறைவாக இருக்கும்:

« PREV
NEXT »