BREAKING NEWS
latest

Sunday, November 15, 2020

அமீரகத்தில் பின்வரும் வெளிநாட்டு தொழிலாளர்கள் அனைவருக்கும் 10 வருட விசா வழங்க முடிவு:

அமீரகத்தில் பின்வரும் வெளிநாட்டு தொழிலாளர்கள் அனைவருக்கும் 10 வருட விசா வழங்க முடிவு:


Nov-15,2020

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 10 ஆண்டு கோல்டன் ரெசிடென்சி விசாவை அதிக வேலைவாய்ப்பு துறைகளுக்கு நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இன்று மதியம் அறிவிப்பை வெளியிட்டார்.

Official Link:

https://twitter.com/HHShkMohd/status/1327957270416777216?s=19

பி.எச்.டி பெற்றவர்கள்,மருத்துவர்கள் , கணிப்பொறியியல்,எலக்ட்ரானிக்ஸ் , புரோகிராமிங்,எலக்ட்ரிக்கல்ஸ் மற்றும் Biotechnology ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற அனைவருக்கும் புதிய கோல்டன் ரெசிடென்சி விசாவைப் பெறலாம் என்று கூறியுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அதிக மதிப்பெண்கள் ( 3.8 அல்லது அதற்கு மேல் ) பெறும் நபர்களுக்கும் கோல்டன் விசாக்கள் கிடைக்கும். மேலும் 

Artificial intelligence, Big data,  Epidemiology மற்றும் Virology  ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற பட்டதாரிகளுக்கும் கோல்டன் விசாக்கள் வழங்கப்படும் என்று ஷேக் முகமது ட்வீட் செய்துள்ளார். மேலும் புதிய பட்டியலில் நாடு முழுவதும் உள்ள உயர்நிலைப் பள்ளிகளிலிருந்தும் அதிக மதிப்பெண் பெறும் சாதனையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரினரும் இதற்கு தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

இது முதல் பட்டியல்  மட்டுமே என்றும், கோல்டன் விசாவிற்கு தகுதியானவர்களின் பட்டியலில் மேலும் பல பிரிவுகள் சேர்க்கப்படும் என்றும் ஷேக் முகமது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சி மற்றும் தொடர்ந்து வருங்காலத்தில் நாட்டின்  முன்னேற்றத்தை திறமையுள்ள நபர்கள் தேவை என்று  அவர் மேலும் கூறினார். அமீரகத்தில் தற்போது வரையில் தொழில் அதிபர்கள் உள்ளிட்ட சில பிரிவுகளில் உள்ளவர்களுக்கு இந்த வகை விசாகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to அமீரகத்தில் பின்வரும் வெளிநாட்டு தொழிலாளர்கள் அனைவருக்கும் 10 வருட விசா வழங்க முடிவு:

« PREV
NEXT »