BREAKING NEWS
latest

Friday, November 13, 2020

குவைத்தில் ஜனவரி-1 முதல் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு விசா புதுப்பித்தல் கிடையாது:

குவைத்தில் ஜனவரி-1 முதல் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு விசா புதுப்பித்தல் கிடையாது:

நவம்பர்-13,2020

குவைத்தில் வருகிற ஜனவரி-1,2021 முதல் உயர் நிலை பள்ளிக்கூட கல்வி தகுதி உள்ள அனைவருக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்று மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி குவைத் தினசரி நாளிதழ் இன்று வெள்ளிக்கிழமை மாலையில் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து புது வருடம் முதல் மேல்குற்றிபிட்ட பிரிவின் கீழ் உள்ள நபர்களின் விசா புதுப்பித்தல் செய்யப்படாது,இதையடுத்து இவர்கள் ஒப்பந்தம் தானாகவே காலாவதி ஆதவன் மூலம் குவைத்திலிருந்து வெளியேற வேண்டியது இருக்கும்.

விசா காலாவதி ஆகியும் குவைத்தில் ஏதேனும் தவிர்க்க முடியாத காரணங்களால் சிக்கியுள்ள நபர்களுக்கு மட்டும், தற்காலிக விசா 1 மாதம் முதல் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து வழங்கபடும் என்றும், இது Residency Affairs அதிகாரிகள் முடிவைப் பொறுத்து என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும் மேல்குற்றிபிட்ட பிரிவின் கீழ் உள்ள 100,000 ற்கும் அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்கள் குவைத்தில் வேலை செய்து வருகின்றனர்,அவர்களை இந்த அறிவிப்பு பெரிதும் பாதிக்கும்.

ஆனால் இப்படிப்பட்ட நபர்கள் குடும்பத்துடன் குவைத்தில் வசித்து வந்தால்,அதற்கு மேல் வேலை செய்யவில்லை என்ற உத்தரவாதம் அடிப்படையில் குடும்ப விசாவில் மாறி தொடர்ந்து நாட்டில் தங்கியிருக்க மனிதாபிமான அடிப்படையில் வாய்ப்பு வழங்கபடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் ஜனவரி-1 முதல் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு விசா புதுப்பித்தல் கிடையாது:

« PREV
NEXT »