BREAKING NEWS
latest

Friday, January 10, 2020

குவைத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக முதலாளி(Sponsor)-யால் பதிவு செய்யப்படும் தலைமறைவு வழக்குகளுக்கு நிபந்தனை எற்பட்டுள்ளது:

குவைத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக முதலாளி(Sponsor)-யால் பதிவு செய்யப்படும் தலைமறைவு வழக்குகளுக்கு நிபந்தனை எற்பட்டுள்ளது:



குவைத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக முதலாளி(Sponsor)-யால் பதிவு செய்யப்படும் Abscond எனபடும் தலைமறைவு வழக்குகள்(வீட்டுத் தொழிலாளர்கள் வீட்டை விட்டும் மற்றும் கம்பெனிகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அங்கிருந்த வெளியேறும்) பதிவு செய்ய வரையறைகளை(நிபந்தனைகளை) எற்பட்டுத்தி புதிய நடைமுறை கடைபிடிக்க குவைத் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்த புதிய விதிமுறை உடனடியாக நடைமுறையில் வரும் என்று சில குவைத் தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி Abscond வழக்குகள் பதிவு செயல்படுவதற்கு முன்பு சம்மந்தப்பட்ட தொழிலாளின் பக்கமும் கேட்டு தெளிவுபெற்ற பிறகு  மட்டுமே தலைமறைவு வழக்கு பதிவு செய்ய முடியும்.

இந்த தகவலை குவைத் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் தொழிலாளர் பாதுகாப்பு குழுவின் உதவி இயக்குநர் டாக்டர் முபாரக் அல் ஜாபர் தெரிவித்தார் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஸ்பான்சர்களிடமிருந்து தப்பியோடிய 4 பிரிவுகளில் உள்ள தொழிலாளர்களை நாடு கடத்துவதும் புதிய விதிமுறை நடைமுறையில் வருவதன் மூலம் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த 4 முக்கியமாக பிரிவில் ஓன்று குவைத்தில் படிக்கும் குழந்தைகளின் தந்தையை நாடுகடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது. இதன் மூலம் உண்மையான பாதிக்கபடும் தொழிலாளர்கள் பயன் பெறமுடியும். யாராவது சொல்வதை அல்லது ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி வீட்டைவிட்டு ஓடும் நபர்களுக்கு எந்த பலனும் இருக்காது.


Reporting by Kuwait tamil pasanga Team







WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக முதலாளி(Sponsor)-யால் பதிவு செய்யப்படும் தலைமறைவு வழக்குகளுக்கு நிபந்தனை எற்பட்டுள்ளது:

« PREV
NEXT »