BREAKING NEWS
latest

Saturday, January 11, 2020

உக்ரைன் விமான விபத்து மன்னிச்சுடுங்க; தெரியாமல் சுட்டு வீழ்த்திவிட்டோம், ஈரான் அரசு பகீர் ஒப்புதல்:

உக்ரைன் விமான விபத்து மன்னிச்சுடுங்க; தெரியாமல் சுட்டு வீழ்த்திவிட்டோம், ஈரான் அரசு பகீர் ஒப்புதல்:


ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவுக்கு புறப்பட்டு சென்ற விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே விமான நிலையத்துக்கு அருகே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 176 பேரும் சம்பவ இடத்திலே பலியாகினர்.

ஈராக்கில் அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய சிறிது நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று யூகங்கள் எழுந்தன. ஆனால் அதனை நிராகரித்த ஈரான் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடந்தாக கூறியது.

விமானம் நடுவானில் பறந்தபோது எந்திர கோளாறால் திடீரென தீப்பிடித்ததாகவும், அதனால் விமானத்தை மீண்டும் விமான நிலையத்துக்கு திருப்ப முயற்சித்தப்போது விமானம் விழுந்து நொறுங்கியதாகவும் விபத்து குறித்து விசாரணை நடத்தும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே சமயம் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை விமான உற்பத்தியாளரான போயிங் நிறுவனத்திடமோ அல்லது அமெரிக்காவிடமோ வழங்க மாட்டோம் என ஈரான் கூறியது. இது விமான விபத்து தொடர்பான சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. ஆனால்,  உக்ரைன் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா மற்றும் கனடா குற்றம் சாட்டியது.

இந்நிலையில் ஈராக்கில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது தங்களுடைய ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்டதுதான் என்று ஈரான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு இருக்கிறது. ஈரான் அரசு தொலைக்காட்சியில் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி உக்ரைன் விமானத்தை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம். பதற்றம் நிறைந்த ராணுவ பகுதி அருகே உக்ரைன் விமானம்  பறந்து கொண்டிருந்ததாகவும்.

ராக்கெட் தாக்குதல் நடத்தும் போது தவறாக சுட்டு வீழ்த்திவிட்டோம் எனவும்,தெரிந்து செய்யவில்லை. இந்த விபத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இது தொடர்பாக முறையான விசாரணைக்கு ஒத்துழைப்போம் என்றும் தெரிவித்துள்ளது.

வீரர்கள் கவனக்குறைவால் இந்த சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான நிவாரண நிதி அளிக்கப்படும். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காது என்று, ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் இந்த செயல் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to உக்ரைன் விமான விபத்து மன்னிச்சுடுங்க; தெரியாமல் சுட்டு வீழ்த்திவிட்டோம், ஈரான் அரசு பகீர் ஒப்புதல்:

« PREV
NEXT »