BREAKING NEWS
latest

Tuesday, November 5, 2019

துபாய் பெண் 36 வருடங்களுக்கு பிறகு தன்னுடைய இந்திய தாய் மற்றும் சகோதரியை கண்டுபிடிக்க நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது:

துபாய் பெண் 36 வருடங்களுக்கு பிறகு தன்னுடைய இந்திய தாய் மற்றும் சகோதரியை கண்டுபிடிக்க நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது:


அமீரகத்தில் ராஸ்-அல்- கைமாவைச் சேர்ந்த மரியம் அப்துல் ரஹ்மான் அல் ஷெஹி 36 வருட பிரிவினைக்குப் பிறகு, இறுதியாக தனது தாயைக் கண்டுபிடித்தார்.

 36 வயதான மரியம் அப்துல் ரஹ்மான் அல் ஷெஹி
தந்தை மற்றும் தாய் கருத்து வேறுபாடுகள் காரணமாக  பிரித்தனர். இதையடுத்து தாயகம் திரும்பிய தாயை அதற்கு பிறகு மரியம் பார்த்தே இல்லை. தாயால் திரும்ப அமீரகம் செல்லவும் முடியாத நிலை. தந்தையின் அரவணைப்பிலேயே வளர்த்தார்

சில வருடங்களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு தந்தை இறந்த நிலையில் தனியாக தவித்த மரியம்  தன்னுடைய சிறிய வயது முதல் ஏக்கத்துடன் பார்க்க  தவித்த தாயை கண்டுபிடிக்க முடிவு செய்தார். இதையடுத்து சமூக வலைதளங்கள் மற்றும் இந்திய பத்திரிகைகளின் உதவியை நாடினார்.

பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தன்னுடைய தாயை கண்டுபிடித்தார். இதில் மரியத்திற்கு மற்றொரு இரட்டிப்பு மகிழ்ச்சி காத்திருந்தது அவளுக்கு அதுவரை தெரியாத இன்னொரு தங்கையுடன் இருந்தது அச்சு அசலாக அவளை போன்றே தங்கையும் இருக்கிறாள். அதாவது ஐக்கிய அரபு எமிரேட்ஸை விட்டு வெளியேறியபோது அவரது தாயார் கர்ப்பமாக இருந்தார். தனது அனுபவத்தை மரியம்  "நம்பிக்கையின் பயணம்" என்று பதிவாக வெளியிட்டுள்ளார்

Reporting by Kuwait tamil pasanga Team
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to துபாய் பெண் 36 வருடங்களுக்கு பிறகு தன்னுடைய இந்திய தாய் மற்றும் சகோதரியை கண்டுபிடிக்க நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது:

« PREV
NEXT »