BREAKING NEWS
latest

Wednesday, November 6, 2019

குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் 15ம் ஆண்டு பெருவிழா, சிறப்பு விருந்தினராக வேல்முருகன் வருகை:

குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் 15ம் ஆண்டு பெருவிழா, சிறப்பு விருந்தினராக வேல்முருகன் வருகை:


குவைத் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் இதையே நேரடி அழைப்பாக ஏற்றுக் கொண்டு அனைத்து நிகழ்ச்சிகளையும் சிறப்பித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். குவைத்தில் ஐம்பெரும் விழா; முதன் முறையாக வேல்முருகன், அன்வர் பாதுஷா உலவி, அப்துல் காதிர் மிஸ்பாஹி பங்கேற்பு

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 15-ம் ஆண்டு ஸூரத்துன் நபி பெருவிழா எதிர்வரும் நவம்பர் 7 முதல் 9 வரை நடைபெறுகிறது. இதில்  தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்,
ஜமாஅத்துல் உலமா சபை அன்வர் பாதுஷா உலவி மற்றும் அப்துல் காதிர் மிஸ்பாஹி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்யும் 15ம் ஆண்டு மீலாது மாநாடு, சமய நல்லிணக்க விழா, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, 15ம் ஆண்டு சிறப்பு மலர் வெளியீடு மற்றும் பரிசுகள் வழங்குதல் என  ஐம்பெரும் விழாவாக எதிர்வரும் நவம்பர் 8, 2019 வெள்ளிக்கிழமை மாலை குவைத் சிட்டி, மிர்காப் அல் ஷாயா பள்ளிவாசல் அரங்கில் நடைபெறும்.

மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சி நவம்பர் 7, 2019 வியாழன் மாலை, வெள்ளிக்கிழமை நண்பகல், நிறைவு நிகழ்ச்சி நவம்பர் 9, 2019 சனிக்கிழமை காலை ஃகைத்தான் தமிழ் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது இன்ஷா அல்லாஹ்.

இந்நிகழ்ச்சிகளில் முதன் முறையாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி. வேல்முருகன், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச் செயலாளர், சென்னைப் பல்கலைக்கழக அரபித் துறை பேராசிரியர் மவ்லவீ முனைவர் வி.எஸ். அன்வர் பாதுஷா உலவி மற்றும் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மேனாள் பொருளாளர் மவ்லவீ ஏ.கே.ஏ. அப்துல் காதிர் மிஸ்பாஹி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்ற உள்ளனர்.

குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் 15ம் ஆண்டு சிறப்பு மலர் வெளியீடு, சிறப்பு கருத்தரங்கம், மகளிர் சிறப்பு நிகழ்ச்சி மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்குதல் என பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மூன்று நாட்கள் தொடராக நடைபெறும் இந்நிகழ்ச்சிகளில் குவைத் வாழ் தமிழ் உறவுகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தினர் அன்புடன்
அழைக்கிறோம்.


Reporting by:

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 9787 2482
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் 15ம் ஆண்டு பெருவிழா, சிறப்பு விருந்தினராக வேல்முருகன் வருகை:

« PREV
NEXT »