BREAKING NEWS
latest

Tuesday, October 22, 2019

குவைத் குடிநுழைவுத் துறை அமைச்சகம் விசா தொடர்பான சில புதிய விதிமுறைகளை நடைமுறையில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது:

குவைத் குடிநுழைவுத் துறை அமைச்சகம் விசா தொடர்பான சில புதிய விதிமுறைகளை நடைமுறையில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது:


குவைத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். ஆனால்  இனிமுதல் நீண்ட காலமாக வசித்து வருகின்ற வெளிநாட்டினர் தங்கள்  குழந்தைகளுக்கு நீண்டகால Sponsor-ஆக இருக்க முடியாதபடி திருத்தம் கொண்டுவர குடிநுழைவு துறை அமைச்சகம் ஆலோசனை செய்து வருகின்றது என்று, உள்துறை அமைச்சகத்தை மேற்கொள்ள காட்டி Al- Qabas தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளாத, அரபுடைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

ஆனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை குவைத்திற்கு விசிட்டிங் விசாவில் அழைத்துவர  Sponsor-ஆக இருப்பதில் எந்த பிரச்சினை இருக்காது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் அந்த செய்தியில் மனைவி மற்றும் குழந்தைகள் குடும்பத் தலைவரின்(கணவர்/தந்தை) Sponsorship-யின் கீழ் குவைத்தில் வசித்து வந்தால், கணவர் தனது வேலையை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினால், மனைவி மற்றும் குழந்தைகளும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியது இருக்கும்.

ஆனால் சில இக்கட்டான சூழ்நிலை கணவர் நாட்டை விட்டு வெளியேறினாலும், மனைவிக்கு Sponsorship  வழங்கி குழந்தையுடன் குவைத்தில் தொடர்ந்து தங்க முடியும். ஆனால்இது உள்துறை அமைச்சகத்தின் சம்மந்தப்பட்ட துறையின்  அதிகாரியின் முடிவை பொறுத்து இருக்கும்.

கடந்த சில வாரங்களில் குவைத்தில் உள்ள வெளிநாட்டினர் பலர் தாயகத்தில் உள்ள தங்கள் குழந்தைகளை குடும்ப விசாவில் அழைத்து வருவது அதிகரித்துள்ள நிலையில் புதிய சட்டம் நடைமுறையில் கொண்டுவர அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றது என்று அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் குடிநுழைவுத் துறை அமைச்சகம் விசா தொடர்பான சில புதிய விதிமுறைகளை நடைமுறையில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »