BREAKING NEWS
latest

Saturday, September 7, 2019

தமிழக முதல்வர் பழனிசாமி அமெரிக்கா பயணத்தை முடிந்து, இரண்டு நாள் பயணமாக துபாய் வருகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது:

தமிழக முதல்வர் பழனிசாமி அமெரிக்கா பயணம் முடிந்து, இரண்டு நாள் பயணமாக  துபாய் வருகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றுடன் தனது அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு துபாய் புறப்படுகிறார். அங்கு, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்திய துணை தூதரகம் இணைந்து நடத்தும் துபாய் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

ஐக்கிய அரபு அமீரக அரசின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறையின் கீழ் இயங்கும் பிஸ்னஸ் லீடர்ஸ் பார்ம்’’ என்ற அமைப்பும், இந்திய துணை தூதரகமும் இணைந்து இதை நடத்துகிறது.

பின்னர், துபாய் தொழில் முனைவோர்களை தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கும் வகையில் நடைபெறும் கூட்டத்திலும்  பங்கேற்கிறார். நாளை செப்டம்பர் 8 மற்றும்  9 ஆகிய நாட்களை துபாயில் கழிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற 10ம் தேதி(செவ்வாய்)  தமிழகம் திரும்ப உள்ளார்.

வளைகுடா தளம் என்பதால் தமிழக முதல்வர் என்ற அடிப்படையில் மட்டுமே பதிவு  இதற்கும் அரசியல்  சாயம் பூச வேண்டாம். குவைத்தி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பிரதமர் முதல்  இந்தியாவைச் சேர்ந்த கட்சி சார்ந்த மற்றும் பிரபலங்கள் யாரு வந்தாலும் அது தொடர்பாக செய்தியை இந்த தளம் பதிவு செய்வது அனைவரும் அறிந்ததே

Reporting By.kuwait tamil pasanga Team


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to தமிழக முதல்வர் பழனிசாமி அமெரிக்கா பயணத்தை முடிந்து, இரண்டு நாள் பயணமாக துபாய் வருகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »