BREAKING NEWS
latest

Friday, September 27, 2019

ஓமன் நாட்டில், மீன்பிடிக்க சென்ற நம்புதாளை மீனவர்கள் 4 பேர் நடுக்கடலில் மாயம் என்ற செய்தி வெளியாகியுள்ளது:


ஓமன் நாட்டில், மீன்பிடிக்க சென்ற நம்புதாளை மீனவர்கள் 4 பேர் நடுக்கடலில் மாயம் என்ற செய்தி வெளியாகியுள்ளது:


ஓமன் நாட்டில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற நம்புதாளை மீனவர்கள் 4 பேர் மாயமாகிவிட்டனர். இதுதொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள நம்புதாளை படையாச்சி தெருவை சேர்ந்த மீனவர்களான கார்மேகம்(வயது 50), ராமநாதன்(38), கே.காசிநாதன்(36), ஆர்.காசிலிங்கம்(23) ஆகியோர் கடந்த ஓராண்டுக்கு மேலாக ஓமன் நாட்டில் மஜ்ஜிதா தீவு பகுதியில் இருந்து கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் 4 பேரும் வழக்கம்போல் கடந்த 16-ந்தேதி பேர் ஒரு படகில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அவர்களுடன் மேலும் 4 பேர் சென்றனர். ஒரு வாரத்தில் கரை திரும்ப வேண்டிய அவர்கள் 10 நாட்களாகியும் கரை திரும்பவில்லையாம். அந்த மீனவர்கள் புயலில் சிக்கி நடுக்கடலில் மாயமாகி இருக்கலாம் என்று அந்த நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை அறிந்த ஓமனில் வேலை செய்து வரும் நம்புதாளையை சேர்ந்தவர்கள் மாயமான மீனவர்களின் குடும்பங்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த மீனவர்களின் குடும்பத்தினர் கடலுக்கு சென்ற மீனவர்களின் கதி என்ன என்பதை அரியமுடியாமல் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து நம்புதாளை கிராம மக்கள் சார்பில் கல்கண்டு, முத்துராக்கு, ஆறுமுகம், காளிதாஸ் ஆகியோர் ஓமன் நாட்டில் நம்புதாளை மீனவர்கள் 4 பேர் மாயமானது குறித்து மத்திய-மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாயமாகியுள்ள மீனவர்களை கண்டுபிடித்து அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உடனே தேடும் படிக்கு நடவடிக்கை எடுக்க மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளனர்.

இந்த கோரிக்கை மனுவை இந்திய தூதரகத்திற்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்  தமிழக முதல்-அமைச்சர், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் மீனவ குடும்பத்தினர் அளித்துள்ளனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to ஓமன் நாட்டில், மீன்பிடிக்க சென்ற நம்புதாளை மீனவர்கள் 4 பேர் நடுக்கடலில் மாயம் என்ற செய்தி வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »