BREAKING NEWS
latest

Saturday, August 24, 2019

குவைத்தில் உள்ள தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் முப்பெரும் விழா:

குவைத்தில் உள்ள  தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் இஸ்லாமிய புத்தாண்டு; 15-ம் ஆண்டு ஆண்டின் துவக்கம் உட்பட முப்பெரும் விழா:

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 15-ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சியுடன் முப்பெரும் விழா எதிர்வரும் ஆகஸ்ட் 29, 2019 (வியாழக்கிழமை) முதல் 31, 2019 (சனிக்கிழமை) வரை கைத்தான் கே-டிக் தமிழ் பள்ளிவாசலில் நடைபெறும் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழகத்திலிருந்து சிறப்பு விருந்தினராக கே.எம். காஜா முஹ்யித்தீன், (நிறுவனர் & முதல்வர், மன்பவுல் பாக்கியாத் மகளிர் அரபிக் கல்லூரி, மேலப்பாளையம், நெல்லை) வருகை தருகிறார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் குடும்பத்துடனும், நண்பர்களுடனும், உறவுகளுடன் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர், பள்ளிவாசல் நிர்வாகம். இரவு உணவு, பெண்களுக்கு தனியிட வசதி, வாகனங்கள் நிறுத்த விசாலமான திடல் போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.



Reporting: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் உள்ள தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் முப்பெரும் விழா:

« PREV
NEXT »