BREAKING NEWS
latest

Thursday, August 22, 2019

குவைத்தில் வேலைக்கு வந்து பரிதவித்த தமிழக இளைஞர் உட்பட மூன்று இந்தியர்கள் தூதரக உதவியுடன் நேற்று தாயகம் திருப்பினர்:


குவைத்தில் வேலைக்கு வந்து பரிதவித்த தமிழக இளைஞர் உட்பட  மூன்று இந்தியர்கள் தூதரக உதவியுடன் நேற்று தாயகம் திருப்பினர்:

குவைத்தில் தமிழகத்தில் இருந்து ஒரு இளைஞர் மற்றும் கேரளாவில் இருந்து இரண்டு இளைஞர்கள் என்று மூன்று பேர் ப.....யா பகுதியில் உள்ள மூன்றெழுத்து கொண்ட  உணவகத்திற்கு வேலைக்காக  வந்துள்ளனர். வந்து இரண்டு மாதம் ஆகும் சூழலில் அக்காமா எடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சூழலில் அந்த உணவகத்தை உரிமையாளர் வேறு ஒருவருக்கு விற்றுள்ளார். 

இதனால் அந்த உணவகத்திற்கு வேலைக்கு வந்த மூவரின் நிலை கேள்விக்குறியானது. மேலும் விசா கொடுத்து அழைத்து வந்த இடைத்தரகர் ஊருக்கு சென்று விட்டார்.விசா கொடுத்த முதலாளி துருக்கிக்கும் சென்ற நிலையத்தில். சாப்பாடு இல்லாமல் அக்காமா இல்லாமல் நிர்கதியாக நின்றனர்.

இது குறித்து வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கத்திற்கு அந்த மூவரும் தொடர்பு கொண்டு உதவி கேட்க நேரில் சென்று விபரம் அறிந்தோம் எந்த உதவிகள் தேவைபட்டாலும் முடிந்தவரை உதவுகிறோம் எனக்கூறி விட்டு வந்துள்ளனர். மேலும், அவர்கள் ஏற்கனவே இந்திய தூதரகத்தில் புகார் கொடுத்து ஏமாற்றியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கேட்டிருந்தனர்.

அதனடிப்படையில் அவர்களது முதலாளியிடம் இருந்து தூதரகம் மூவரின் பாஸ்போர்டையும் பெற்றுள்ளனர். குவைத்தில் உள்ள கேரளா அமைப்பு ஒன்று மூலம் மூவருக்கும் விமான பணச்சீட்டு எடுத்துக் கொடுத்து உதவியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு விமானம்  மூவரும் கொச்சிக்கு கிளம்பினர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் வேலைக்கு வந்து பரிதவித்த தமிழக இளைஞர் உட்பட மூன்று இந்தியர்கள் தூதரக உதவியுடன் நேற்று தாயகம் திருப்பினர்:

« PREV
NEXT »