BREAKING NEWS
latest

Thursday, July 4, 2019

குவைத் விமான நிலையத்தில் பயணிகளை சோதனை செய்ய அதிநவீன பயோமெட்ரிக் தொழில்நுட்பம் இன்று முதல் பயன்படுத்தப்படுகிறது:

குவைத் விமான நிலையத்தில் பயணிகளை சோதனை செய்ய அதிநவீன பயோமெட்ரிக் தொழில்நுட்பம் இன்று முதல் பயன்படுத்தப்படுகிறது:

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் இன்று வியாழக்கிழமை முதல் பயணிகளை சோதனை செய்ய அதிநவீன பயோமெட்ரிக் தொழில்நுட்பம் பயன்படுத்த தொடங்குகிறது என்று குவைத் விமான நிலைய சிவில் ஏவியேஷன் இயக்குநர் ஜெனரல் Yousef Al-Fouzan நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

குவைத் விமான நிலையத்தில் புதிய முனையம் (T4) திறக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவு செய்த நிலையில் சோதனை அடிப்படையில், இன்று முதல் 3 மாதங்களுக்கு இந்த அதிநவீன சோதனை கருவி புதிய முனையத்தில் பயன்படுத்தபடும் (குவைத் எயர்லைன்ஸ் விமானங்கள் செல்லும் முனையம்). இது வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் மற்ற 1 முதல் 3 வரையில் உள்ள அனைத்து முனையங்களிலும் இந்த கருவி பயன்படுத்தி பயணிகள் சோதனை செய்யப்படுவார்கள்.

இந்த தொழில்நுட்பம் மூலம் பயணியின் முகத்தை(Face Scanning)அடையாளம் காணப்பட்டால் அடுத்த நொடியில் பயணி பற்றி விபரங்கள் மற்றும் விமான பயணம்,பயணச்சீட்டு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சில வினாடிகளில் எளிதாக அதிகாரிகள் கண்டறிய முடியும் என்று குவைத்தின் சிவில் ஏவியேஷன் இயக்குநர் மேலும் தெரிவித்துள்ளார்.மேலும் பயணி விமான நிலையத்தில் எங்கிருந்தாலும் எளிதாக அடையாளம் காண முடியும்.

இதன்மூலம் விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் காரணமாக ஏற்படும் நெருக்கடி தவிர்க்க முடியும்.பயணியின் உடைமையின் எடை சோதனை, பயணிகள் உள்நுழைவு சோதனை மற்றும் வெளியேறும் பயணிகள் உடைமைகளை எடுப்பது ஆகியவை இந்த நடைமுறையின் மூலம் மேலும் எளிதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நடைமுறை விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகள் மத்தியில் நன்மதிப்பை ஏற்படுத்தும் என்றும், சர்வதேச தரத்தில் விமான நிலையத்தின் செயல்பாடுகள் கொண்டுவர நடவடிக்கைகள் தொடரும் என்றும் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்


Reporting by Kuwait tamil pasanga team.







WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் விமான நிலையத்தில் பயணிகளை சோதனை செய்ய அதிநவீன பயோமெட்ரிக் தொழில்நுட்பம் இன்று முதல் பயன்படுத்தப்படுகிறது:

« PREV
NEXT »