BREAKING NEWS
latest

Monday, July 15, 2019

அமீரகத்தில் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்கள் உங்கள் குடும்பத்தை அழைத்துச் செல்ல இந்த சம்பளம் போதும் புதிய சட்டம் நடைமுறையில்:


அமீரகத்தில் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்கள் உங்கள்  குடும்பத்தை அழைத்துச் செல்ல இந்த சம்பளம் போதும் புதிய சட்டம் நடைமுறையில்:

துபாய் Federal Authority வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் உங்கள் குடும்பத்துடன் வசிக்க குடும்ப விசா எடுக்க 4000 திர்ஹம் அல்லது 3000 திர்ஹம் + கம்பெனி வழங்கும் தங்கும் வீடு இருந்தால் குடும்ப விசா வழங்கப்படும் என்ற புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.முன்னர் இது ஒருவர் குடும்பத்துடன் வசிக்கும் விசா எடுக்க குறைந்தது 5000 திர்ஹம் வேண்டும் என்பது சட்டமாக இருந்தது.

தொழிலாளர்கள் விசாவில் உள்ள தொழில்(Profession) தொடர்பாக இருந்த (கட்டுபாடுகள்) சட்டங்கள் அனைத்தும் இந்த புதிய அறிவிப்பு மூலம் ரத்து செய்துள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஆதரவாக கடந்த சில வருடங்களுக்கு பிறகு அறிவித்துள்ள புதிய முக்கியமான அறிவிப்பு இதுவாகும்.

பெண் மற்றும் ஆண் பாகுபாடு இல்லாமல் சட்டம் அனைவரும் ஒரேமாதிரியாக இருக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவன், மனைவி இருவரும் அமீரகத்தில் வேலை செய்பவர்கள் என்றால் அவர்கள் இருவரின் சம்பளம் சேர்த்து மேல் குறிப்பிட்ட சம்பளம் இருந்தால் தங்களை குழந்தைகளுக்கு விசா எடுக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

வெளிநாட்டு தொழிலாளர்களின் குடும்ப ஸ்திரத்தன்மையையும்,சமூக ஒற்றுமையையும் மேம்படுத்துவதோடு, தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையில் ஆரோக்கியமான சமநிலையை பேணுகை வகையில் இந்த சட்டம் அமல்படுத்துவதாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திறமையான தொழிலாளர்களை ஈர்ப்பதும் இந்த முடிவின் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்

Reporting by Kuwait tamil pasanga team.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to அமீரகத்தில் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்கள் உங்கள் குடும்பத்தை அழைத்துச் செல்ல இந்த சம்பளம் போதும் புதிய சட்டம் நடைமுறையில்:

« PREV
NEXT »