BREAKING NEWS
latest

Monday, July 8, 2019

குவைத்தில் வேலைக்கு வந்த 2 பெண்களை மீட்டுத்தர கோரி குடும்பத்தினர் மாவட்ட ஆட்சிரியரிடம் மனு அளித்தனர்:


குவைத்தில் வேலைக்கு வந்த 2 பெண்களை மீட்டுத்தர கோரி குடும்பத்தினர் மாவட்ட ஆட்சிரியரிடம் மனு அளித்தனர்:
(புகைப்படம் செய்தி பதிவுக்கான மட்டுமே)

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் செல்வம்- வசந்தாமணி மற்றும் திருமூர்த்தியின்- ராஜேஸ்வரி  ஆகிய இரண்டு தம்பதியினர் வசித்து வருகின்றனர்.திருமூர்த்தி மற்றும் செல்வம் இருவரும் அதே பகுதியில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் செல்வராஜ் என்ற இடைத்தரகர் ஒருவர்,வசந்தாமணி, ராஜேஸ்வரி ஆகியோருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அறிமுகமாகி உள்ளார்.

அவரது பேச்சை கேட்டு, ராஜேஸ்வரி மற்றும் வசந்தாமணி ஆகிய இருவரும் கடந்த மே மாதம் குவைத்தில்  வீட்டு வேலைக்கு வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே ஒரு மாதம் கடந்தபிறகு, வீட்டின் உரிமையாளர் சம்பளம் முறையாக வழங்காமல், கொடுமைபடுத்தி வருவதாக இருவரும் தங்களது குடும்பத்தாரிடம் போன் மூலம் பேசி கதறி அழுததாக கூறப்படுகிறது. அதன் பிறகு கடந்த இரு மாதங்களாக அவர்களிடம் இருந்து எந்த விதமான தொடர்பும் இல்லை.

இடைத்தரகர் செல்வராஜூம் முறையான பதிலை கூறவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த செல்வம் மற்றும் திருமூர்த்தி ஆகியோர்,குவைத்தில் சிக்கியுள்ள தங்களது மனைவிகளை கண்டுபிடித்து மீட்டுத்தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக போலியான ஏஜென்சிகள் மற்றும் இடைத்தரகர்களை நம்பவேண்டாம் என்று எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பல தொடர்பு ஏமாந்து வருவது வேதனைக்குரியது ஆகும்.


இந்த செய்தியை தமிழக செய்தி தளம் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் வேலைக்கு வந்த 2 பெண்களை மீட்டுத்தர கோரி குடும்பத்தினர் மாவட்ட ஆட்சிரியரிடம் மனு அளித்தனர்:

« PREV
NEXT »