BREAKING NEWS
latest

Thursday, July 25, 2019

அமீரகத்தில் இனிமுதல் தமிழ்,மலையாளம் உள்ளிட்ட 110 மொழிகளில் அரசின் சேவைகள் மக்கள் எளிதாக அறிய முடியும்:

அமீரகத்தில் இனிமுதல் தமிழ்,மலையாளம் உள்ளிட்ட 110 மொழிகளில் அரசின் சேவைகள் மக்கள் எளிதாக அறிய முடியும்:

உலகில் முதல் முறையாக ஒரு எழுத்தில் உள்ள அமீரக அரசின் புதிதாக அறிவித்துள்ள அதிகாரபூர்வ அரசு தளம்(Website) U.ae  என்பது ஆகும்.இந்த தளம் மூலம் இனிமுதல் அமீரகத்தில் வேலை செய்யும்  பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் தாய் மொழியில் அரசின் சேவைகள் மற்றும் செய்திகள் உள்ளிட்டவை எளிதாக அறிய முடியும் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த அதிகாரபூர்வ வலைத்தளத்தில் 110 ற்கும் மேற்பட்ட மொழிகள் இணைக்கப்பட்டுள்ளது.இதில் தமிழ்,மலையாளம்,இந்தி தெலுங்கு  உள்ளிட்ட பல இந்தியாவின் உள்ளூர் மொழிகளும் இடம்பெற்றுள்ளது.200 ற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமீரகத்தில் வசித்து வருகிறார்கள் என்பது அரசின் அதிகாரப்பூர்வ கணக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அனைவரும் இனிமுதல் யாருடைய உதவியும் இன்றி தங்கள் தாய் மொழியிலேயே அமீரக அரசின் அறிவிப்புகள் மற்றும் சேவைகள் குறித்த அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் எளிதில் அறிய முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

அதிகாரபூர்வமாக வலை தளத்தின் Link:

https://u.ae/#/


Reporting by Kuwait tamil pasanga team.
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to அமீரகத்தில் இனிமுதல் தமிழ்,மலையாளம் உள்ளிட்ட 110 மொழிகளில் அரசின் சேவைகள் மக்கள் எளிதாக அறிய முடியும்:

« PREV
NEXT »