BREAKING NEWS
latest

Tuesday, June 25, 2019

குவைத்தில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக உற்பத்தியில் பெருமளவில் குறைந்துள்ளதாக தகவல்:


குவைத்தில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக உற்பத்தியில் பெருமளவில் குறைந்துள்ளதாக தகவல்:


குவைத்தில் தற்போது வெப்பநிலை உச்சமடைந்த நிலையில் சாதரணமாக உள்ள உற்பத்தியை விட அனைத்து துறைகளிலும் வாணிக ரீதியாக பொருட்கள் உற்பத்தி குறைந்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

கடந்த ஜீன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையில் குவைத்தில் மத்தியான ஓய்வு நேரம் அறிவிக்கபட்டாலும் குவைத்தில் நிலவும் வானிலை காரணமாக தொழிலாளர்கள் விடுப்பு எடுப்பது அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அதிக வெப்பநிலை நிலவிவரும் நிலையில் தொழிலிடத்தில் பல நேரங்களில் தொழிலாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் வெயில் காலத்தில் அரசு சார்ந்த வேலைகள் மாலை 5 முதல் இரவு 10 மணி என்று மாற்றியமைக்க கோரி பாராளுமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுபோல் வெள்ளம் மற்றும் தண்ணீர் உபயோகம் அதிகளவில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.பெரும்பாலான நாட்களில் குவைத் வெப்பநிலை 50°C  செல்சியசுக்கும் மேலும் அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது
இதற்கிடையே இந்த கடுமையான வெயிலில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் சூரிய கதிர்கள் நேரடியாக உடலில் படுவதை தவிர்க்க வேண்டும் என்றும்,வாகனங்களில் தண்ணீர் மற்றும் தீயணைப்பு உபகரணங்கள் எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.சில நேரங்களில் உங்கள் அலட்சியம் மரணத்தை கூட ஏற்படுத்தலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Reporting by Kuwait tamil pasanga team.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக உற்பத்தியில் பெருமளவில் குறைந்துள்ளதாக தகவல்:

« PREV
NEXT »