BREAKING NEWS
latest

Friday, May 31, 2019

குவைத்தில் புதிதாக வழங்கும் சிவில்ஜடிகளில் பிழை இருந்தால் உடனடியாக சரிசெய்து இன்னல்களை தவிர சம்மந்தப்பட்ட துறை அறிவுத்தல்:

குவைத்தில் புதிதாக வழங்கும் சிவில்ஜடிகளில் பிழை இருந்தால் உடனடியாக சரிசெய்து இன்னல்களை தவிர சம்மந்தப்பட்ட துறை அறிவுத்தல்:

குவைத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல்  பல்வேறு துறைகளில் வேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வேலை செய்ய அனுமதி வழங்கும் (Permit) அனுமதி பத்திரம் விசா(இக்கமா) ஆனது பாஸ்போர்ட்டில் Sticker(ஸ்டிக்கர்) வடிவில் ஒட்டுவது முற்றிலுமாக நிறுத்தபட்டு தொழிலாளி பற்றிய பாஸ்போர்ட்டில் உள்ள தகவல் மற்றும் தொழிலாளி வேலை செய்யும் துறை சம்பந்தப்பட்ட A to Z 
அனைத்து தகவல்களும் சிவில் ஐடியில் உள்ள மெய்பொருளில் பதிவு செய்யும் புதிய நடைமுறை பின்பற்றப்படுகிறது.
       எனவே வீட்டுத் தொழிலாளர்கள் உள்ளிட்ட எந்த துறையில் வேலை செய்யும் 
எந்த ஒரு தொழிலாளியும் தாயகம் செல்லவும்,குவைத் எல்லைப்புற சோதனை சாவடியின் வழியாக வெறு வளைகுடா நாடுகளில் பயணம் செய்யும், விடுமுறைக்கு தாயகத்திற்கு செல்லும் மற்றும் விடுமுறை முடித்து திரும்ப குவைத் வருவதற்கு அந்த நாடுகளிலும் இந்த புதிய நடைமுறை செயலில் உள்ளதால் கண்டிப்பாக சிவில் ஐடி எப்போது உடன் வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.பாஸ்போர்ட் இருந்தாலும் சிவில் ஐடி இல்லாமல் தாயகம் செல்லவோ திரும்ப குவைத் வரவோ முடியாது
         இப்போது பிரச்சினை அதுவல்ல எனவே இப்படி புதிதாக பெறப்படும் புதிய சிவில் ஐடி
கையில் கிடைத்தவுடன். உடனடியாக
முக்கியமான உங்கள் பெயர் மற்றும் உங்கள் பாஸ்போர்ட் எண் உள்ளிட்ட தகவல்களை உன்னிப்பாக சரிபார்க்கவும் எதாவது பிழை இருந்தால் அதனை சிவில் ஐடி சம்மந்தப்பட்ட அலுவலகம் சென்று சரிசெய்து தாயக பயணம் உள்ளிட்டவைகளுக்கு குவைத் விமான நிலையம் வரையில் சென்று இன்னல்களை தவிர்க்கவும் என்று சம்மந்தப்பட்ட துறை அறிவிப்பு செய்துள்ளது.
      எதாவது பிழை இருந்தால் அதை தற்போது சம்மந்தப்பட்ட துறையின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் சென்று உங்கள் சிவில் ஐடி எண்ணை பதிவு செய்து அதில் கேட்கப்படும் தகவல்களை பதிவு செய்து ஏற்பட்டுள்ள பிழைய திருத்தம் செய்ய முடியும்.
         இதையடுத்து திருத்தம் செய்யப்பட சில தினங்களில் புதிய திருத்தம் செய்யப்பட்ட சிவில் ஐடி உங்களுக்கு கிடைக்கும்.பல நண்பர்களுக்கு முக்கிய பெயர் மற்றும் பாஸ்போர்ட் எண்ணில் பிழை ஏற்பட்ட வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு: நீங்கள் விசா புதுப்பிக்கப்பட்ட நபர் என்றால் சிவில் ஐடி விமான நிலையத்தில் கண்டிப்பாக தேவை

தாயகத்தில் கண்டிப்பாக புதிய சிவில் ஐடி தேவை 

திருத்தம் செய்ய வேண்டிய தளத்தின் link யாருக்காவது தேவை என்றால் இந்த செய்தியின் கீழ் உள்ள Facebook pageயின் Comment box பக்கத்தில் கேட்கவும் பதிவு செய்யப்படும்

            குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்



Report by Kuwait tamil pasanga.
            
             

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் புதிதாக வழங்கும் சிவில்ஜடிகளில் பிழை இருந்தால் உடனடியாக சரிசெய்து இன்னல்களை தவிர சம்மந்தப்பட்ட துறை அறிவுத்தல்:

« PREV
NEXT »