BREAKING NEWS
latest

Sunday, May 26, 2019

கத்தாரில் வேலை செய்யும் நபர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி;இனிமுதல் வாட்ஸ்-அப் அழைப்புகள் பயன்படுத்தலாம்:

கத்தாரில் வேலை செய்யும் நபர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி......இனிமுதல்  வாட்ஸ்-அப் அழைப்புகள் பயன்படுத்தலாம்:


கத்தாரில் உள்ளவர்கள் இனி தெளிவாக வாட்ஸ்-அப் அழைப்புகள் மூலம்
தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதாக அங்கிருந்து வரும் பிரபல செய்தி தளமான கத்தார் லிவிங் செய்தி
வெளியிட்டுள்ளது. 


             கடந்த 2017-ஆம் ஆண்டு கத்தார் - சவுதிக் கூட்டணி நாடுகளுக்கிடையில் பிரச்சினை ஏற்பட்ட நிலையில் வாஸ்-அப், வைபர் உள்ளிட்ட அனைத்து இலவச அழைப்பு செயலிகள் மூலம்  அழைக்கும்
வசதிகள் அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டன குறிப்பிடத்தக்கது.

             கடந்த இரண்டு வருடங்களாக கத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் உட்பட அனைவரும் வாட்ஸ்-அப் அழைப்புக்காக VPN உதவிய நாடிக் கொண்டிருந்தனர்.ஆனால் தற்போது VPN  உதவியின்றி நேரடியாக வாட்ஸ்அப் அழைப்புக்களை மேற்கொள்ள முடியும் என்பதாக கத்தார் லிவிங் தெரிவித்துள்ளது. கத்தாரில் வாட்ஸ்-அப் அழைப்பு வசதி சிறப்பாக செயற்படுவதைதாக பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்கில் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Report by Kuwait tamil pasanga team.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to கத்தாரில் வேலை செய்யும் நபர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி;இனிமுதல் வாட்ஸ்-அப் அழைப்புகள் பயன்படுத்தலாம்:

« PREV
NEXT »