BREAKING NEWS
latest

Tuesday, May 21, 2019

ஓமனில் இந்தியாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 6 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர் என்ற துயரமான செய்தி வெளியிட்டுள்ளது:

ஓமன் நாட்டில், புயல் மழையில் சிக்கி கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர்,வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர் என்ற துயரமான செய்தி வெளியிட்டுள்ளது

              ஓமனில் மருந்தாளுனராக இருக்கும் மகராஷ்டிராவை சேர்ந்த சர்தார் பாசல் அகமது என்பவர், மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். அண்மையில் கைக்குழந்தையான இளைய மகன் நூவின் பிறந்தநாளை கொண்டாட, சர்தாரின் பெற்றோர் மகராஷ்டிராவிலிருந்து ஓமன் வந்திருந்தனர்.




          இந்தநிலையில், கடந்த 18ம் தேதி அவர்கள் குடும்பத்துடன் காரில் வாடி பானி காலித் பகுதிக்கு சுற்றுலா சென்றபோது, புயல்மழை பெய்து, வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்டது.


           இதில் சர்தார் மரக்கிளையை பிடித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், அவரது பெற்றோர், மனைவி மற்றும் 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். தற்போது அவர்களை தேடும் பணியை ஓமன் போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.


       இவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று பாதுகாப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



Report by Kuwait tamil pasanga team


 ​
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to ஓமனில் இந்தியாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 6 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர் என்ற துயரமான செய்தி வெளியிட்டுள்ளது:

« PREV
NEXT »