BREAKING NEWS
latest

Sunday, May 30, 2021

குவைத் தொடர்ந்து இந்தியாவுக்கு உதவிகளை செய்யும்;இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்

குவைத் தொடர்ந்து இந்தியாவுக்கு உதவிகளை செய்யும்;இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர் என்ற தகவல் வெளியாகியுள்ளது

குவைத் தொடர்ந்து இந்தியாவுக்கு உதவிகளை செய்யும்;இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்

இந்தியாவில் கோவிட் வைரஸின் பரவல் அதிகரித்துள்ள நிலையில் தொடர்ந்து உதவிகள் மற்றும் ஆதரவை வழங்கும் என்று குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் டாக்டர்.அகமது நாசர் அல் முஹம்மது அல் சபா கூறினார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடனான தொலைபேசி உரையாடலில், அமைச்சர் அகமது நாசர் அல் முஹம்மது அல் சபா இதை தெரிவித்தார். குவைத் கொடுத்து வருகின்ற ஆதரவுக்கு எஸ்.ஜெய்சங்கர் அவர்கள் நன்றி கூறினார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளின் ஆழத்தை பிரதிபலிக்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். அதேபோல் இரண்டு நாடுகளின் உறவை மேலும் பல்வேறு துறைகளில் மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் பலவற்றை குறித்தும் தொலைபேசி உரையாடலில் இருவரும் விவாதித்தனர் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் தொடர்ந்து இந்தியாவுக்கு உதவிகளை செய்யும்;இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்

« PREV
NEXT »